search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரினாமூல் காங்கிரஸ்"

    மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய 2 நாடுகளுக்கு 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். #MamataBanerjee #WorldTradeConference
    கொல்கத்தா :

    மேற்குவங்காளத்தின் தொழில்துறையில் வெளிநாடுகளின் முதலீடுகளை அதிகரிக்க செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வங்காள உலக வர்த்தக மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

    அதன் ஒரு அங்கமாக மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய 2 நாடுகளில் 12 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

    அதன்படி நிதித்துறை மந்திரி அமித் மித்ரா, நிதித்துறை செயலாளர் திவிவேதி மற்றும் முதன்மை செயலாளர் மலாய் டே ஆகியோருடன் மம்தா பானர்ஜி ஜெர்மனி புறப்பட்டு சென்றார்.

    இந்த பயணத்தின் போது அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளுடன் தொழில்துறையில் முதலீடுகளை பெருக்குவது குறித்து மம்தா பானர்ஜி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த பயணம் ஆண்டு தோறும் நடைபெறும் வங்காள உலக வர்த்தக மாநாட்டுக்கு உத்வேகமாக இருக்கும் என்றும், அதன் முக்கியத்துவத்தை பெருக்கும் என்றும் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MamataBanerjee #WorldTradeConference
    நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று குற்றம்சாட்டியுள்ளார். #Mamata Banerjee
    கொல்கத்தா :

    மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது :-  

    இன்று சர்வதேச ஜனநாயக தினம், ஆனால் நமது நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை நோக்கி செல்வது எனக்கு வேதனை ஏற்படுத்துகிறது. எனவே, நமது நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றினைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    பெங்காலி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த மம்தா, 2014-ம் ஆண்டு 31 சதவிகித வாக்குகளை பெற்று பாஜக மத்தியில் ஆட்சியமைத்து போல் 2019-ம் ஆண்டு மீண்டும் நடக்காது என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #Mamata Banerjee
    ×